அண்ணாமலையை தொடர்ந்து சாட்டையால் அடித்துக் கொண்ட பாஜக நிர்வாகி
மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் முன்பாக சாட்டையால் அடித்து கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி;
திருவள்ளூர் மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவில் முன்பாக சாட்டையால் அடித்து கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கக் கூடாது பதவியில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் தமிழகத்தில் பாஜக மற்ற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திகழ பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாட்டையால் தன்னை அடித்து அடித்துக் கொண்டு வேண்டுகோள் விடுத்த பாஜக பிரமுகர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகோகுல கிருஷ்ணன் பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக உள்ளார் இந்த நிலையில் பாலியல் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்து வருத்தி கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பாலியல் விவகாரங்களில் தொடர்புடைய பாஜக கட்சியினருக்கு அவர்கள் மீது உள்ள வழக்குகள் முடியும் வரை அவர்களுக்கு பதவி வழங்கக் கூடாது என்றும் பதவியில் இருப்பவர்கள ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் தங்களை வழக்கு மூலம் தவறுகளில் ஈடுபடவில்லை என நீதிமன்றத்தில் நிரூபித்த பின்னர் மீண்டும் அவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மற்ற கட்சிகளை காட்டிலும் பாஜக இதற்கு தமிழகத்தில் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி சாட்டையுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து தனக்குத் தானே கோவில் முன்பாக சாட்டையால் அடித்து கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுத்தார் இவருடன் பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.