அரியலூர் ஆட்சியரகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

அரியலூர் ஆட்சியரகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு நடைபெற்றது.

Update: 2024-12-31 10:08 GMT
அரியலூர்,டிச.31 - கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்து வெள்ளி விழாவையொட்டி, அரியலூர் ஆட்சியரகத்தில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி.ரே.தாரகை தான் சேமித்து வைத்திருந்த ரூ.1100 தொகையினை முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவானந்தன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்புத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்கரசி,  மாவட்ட நூலக ஆணைக் குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News