திண்டிவணத்தில் பாதாளசாக்காடை வேலை முடிந்தும் சாலைபோடாத அவலம்

பாதாளசாக்காடை வேலை முடிந்தும் சாலை போடாத அவலம்;

Update: 2024-12-31 12:42 GMT
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில் பாதாள சாக்டை பணிகள் ரூ.265 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருகின்றனர். பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் புதிய தார் சாலைகள் போடப்பட்டு வருகின்றது.இதில் திண்டிவனம் கிடங்கல்(1) பகுதியிலுள்ள பூதேரி செல்லும் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து ஒரு ஆண்டாகியும், இதுவரை புதிய தார் சாலை போடவில்லை. இதுகுறித்து பொது மக்கள், வார்டு கவுன்சிலர்கள் சார்பில் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை புதிய தார் சாலை போடவில்லை.பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, மண் சாலையாக உள்ள பூதேரி பிரதான சாலையில் தார் சாலை போடுவதற்கு நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News