விழுப்புரத்தில் ஆஞ்ச நேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தியொட்டி திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
ஆஞ்ச நேயர் கோவில்களில் அனுமன் ஜெயந்தி
விழுப்புரத்தில் அனுமன் ஜெயந்தியொட்டி நேற்று ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்புவழி பாடுகள் நடந்தது.திரு.வி.க., வீதி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது.மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான நேற்று காலை முதல் மாலை வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது.மூலவர் ஆஞ்சநேயர், எலுமிச்சை பழம் மாலை மற்றும் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டும், பிறகு தங்ககவசம் அணிவித்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அனுமனுக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவித்தும், வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.அனுமன் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தும், விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.இதேபோல், பல்வேறு ஆஞ்சிநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடந்தது.