அரசு ஊழியர் குடியிருப்பு வளாகத்தில்பழமையான அரச மரம் திடீரென வெட்டி 'அகற்றம்'

குடியிருப்பு வளாகத்தில் பழமையான அரசமரம் திடீரென வெட்டி 'அகற்றம்'

Update: 2025-01-01 04:19 GMT
விழுப்புரம் மகாராஜபுரம் அரசு ஊழியர் குடியிருப்பு பகுதி பிரதான சாலையோரம், 25 ஆண்டு பழமையான அரச மரம் இருந்தது. இந்த அரச மரத்தை, கடந்த 26ம் தேதி திடீரென வெட்டி, அகற்றும் பணி துவங்கியது. பழமையான மரத்தை வெட்டுவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து வெட்டப்பட்ட கிளைகள் மட்டும் அகற்றப்பட்டது. ஆளுயர மரத்தின் அடிப்பகுதியை, வெட்டாமல் விடப்பட்டுள்ளது.அதே வளாகத்தில், தமிழ்நாடு அரசு வீட்டுவசதி வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. மரம்வெட்டப்பட்டது குறித்து சம்பந்தபட்ட அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, ' 'வெட்டப்பட்ட மரம் அலுவலகத்திற்கு எதிர்புறத்தில் இருந்தபோதும், அது எங்களது கட்டுப்பாட்டில் கிடையாது.-இதையடுத்து, விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு அலுவலரிடம் கேட்டபோது, ' அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள பழமையான மரம் வெட்டப்பட்டதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வரவில்லை. அதேபோல், அந்த மரத்தை வெட்டுவதற்கு எங்கள் அலுவலகத்தில் இருந்து அனுமதி வழங்கப்படவில்லை என்றார்.இப்பிரச்னை குறித்து தங்களது கவனத்திற்கு வந்தும், அதிகாரிகள் அனைவரும் புகார் வந்தால் விசாரிப்போம் என ஒதுங்கிக் கொண்டனர்.பழமையான மரத்தை வெட்ட உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதற்கு அதிகாரிகளிடம் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

Similar News