கே.ஜி., வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி
சி.பி.எஸ்.இ., பள்ளியில் உலக சாதனை நிகழ்ச்சி
அசோகபுரி கே.ஜி., வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ., பள்ளியில் சிலம்பத்தில் நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்கள் செந்தில்குமார், சுந்தர் தலைமை வகித்தனர். சிலம்பம் சுற்றுதல் போட்டியில், இடைவிடாமல் ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் சிலம்பத்தில் உள்ள 17 வகையான திறன்களை வெளிப்படுத்தி 114 மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்.சிறப்பு விருந்தினர்களாக, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சண்முகவேல், கஞ்சனூர் காவல் ஆய்வாளர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். நோபல் உலக சாதனை நடுவர்களாக பரத்குமார், ஆனந்முருகன், கலைசெழியன், சிலம்பம் பயிற்சியாளர் அன்பரசி முன்னிலை வகித்தனர்.உலக சாதனை படைத்த அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த சாதனை நிகழ்ச்சி, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. பள்ளி முதல்வர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.