ஆங்கில புத்தாண்டையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
பல இடங்களில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
2024-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு 2025 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி சேலம் 4 ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நள்ளிரவில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் 2025-ம் ஆண்டு அனைவருடைய வாழ்விலும் வளம் பெறவும், நோய் நொடியின்றி வாழ வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிர் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.