மத்திகிரி: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
மத்திகிரி: தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் பரத் (18) இவர் மத்திகிரி அருகே உள்ள கர்னூரில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் நீண்ட நாட்களாக தனது ஊருக்கு செல்லாததால் மன வருத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தத்தில் பரத் நேற்று முன்தினம் தங்கிருந்த வீட்டில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார். இது தகவல் அறிந்து வந்த குறித்து மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.