அரக்கோணத்தில் மாணவியிடம் ஆபாச சைகை காட்டிய அரசு ஊழியர்

5-ம் வகுப்பு மாணவியிடம் ஆபாச சை

Update: 2025-01-06 04:55 GMT
அரக்கோணம் அருகே உள்ள பேரூராட்சி பகுதி ஒன்றில் அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவி கடந்த 3- ம் தேதி காலை 8 மணிக்கு பள்ளியில் காலை உணவு திட்டத் தின் கீழ் வழங்கப்படும் சிற்றுண்டியை சாப்பிடுவதற்கு சென்றுள்ளார். பள்ளி வளாகத்தின் அருகே சிறுமி செல்லும் போது அங்கிருந்த நபர் ஒருவர் அரைகுறை ஆடையுடன் நின்று சிறுமி முன் ஆபாச சைகைகளை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அச்சமடைந்த அந்த சிறுமி அலறியபடி அருகே இருந்த காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்துக்கு ஓடிச் சென்று அங்கிருந்த சமையலரிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். உடனே சமையலர் அங்கு வந்து பார்த்தபோது அந்த நபர் தனது ஆடைகளை சரி செய்து கொண்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டார். குழந்தைக்கு நடந்த இந்த சம்பவத்தை பள்ளி ஆசிரியையிடம் சமையலர் கூறியுள்ளார். இது குறித்து ஆசிரியை உள்ளூர் நிர்வாகிகளிடம் தெரிவித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் அதே பகுதியை சேர்ந்த ஒரு அரசு ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து அரக் கோணம் அனைத்து மகளிர் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்களும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News