பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து மூஞ்சிக்கல் பகுதியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையை தடுக்க சென்ற பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் இன்று கொடைக்கானல் பாஜகவினர் நடத்தியஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பழனியில் இருந்து கொடைக்கானல் வந்த பாஜக மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் அவர்கள் கூட்டம் முடிந்து கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் அவரை கண்காணித்த காவல்துறையினர் தனது சக கட்சி உறுப்பினர்களுடன் பழனி அடிவாரப் பகுதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது பழனி காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இத்தகவலை அறிந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பல்வேறு பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் கொடைக்கானலில் சுமார் 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஒன்று சேர்ந்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் விடுதலை செய் விடுதலை செய் மாவட்ட தலைவரே கனகராஜ் விடுதலை செய் என்றும், சட்ட விரோதமாக மது விற்ற திமுகவினரை கைது செய் என்ற கோஷங்கள் எழுப்பினர். கொடைக்கானல் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர். மேலும் மாவட்ட துணை தனைவர் மதன் கூறியதாவது மாவட்ட தலைவர் விடுதலை செய்ய வில்லை என்றால் தமிழ் நாடு முழுவதும் போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.