நெமிலியில் இருசக்கர வாகனத்தில் போதை பொருள் விற்பனை!
இருசக்கர வாகனத்தில் இரவு நேரத்தில் போதைப்பொருள் விற்பனை
நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட நெமிலி, பனப்பாக்கம், காவே ரிப்பாக்கம் பேரூராட்சிகள், சேந்தமங்கலம், பள்ளூர், துறையூர், ரெட்டிவலம், அகவலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், உள்ளிட்ட போதை பொருட்கள் சில பெட்டிக்கடைகளில் விற்கப்படுகிறது. டீக்கடைகள், மதுபான கடைகள் அருகே உள்ள கடைகளில் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு சிலர் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று ஒரு பாக்கெட் 50 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். உடனடியாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு போதைப்பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.