தமிழ்நாடு முதுநிலை தடகள சங்கம் நடத்திய 39 வது மாநில அளவிலான தடகள போட்டியானது கடந்த 28.12.2024 மற்றும் 29.12.2024 ஆகிய தேதிகளில் ஈரோடு மாவட்டம் வஉசி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா தடை தாண்டும் போட்டி, உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று போட்டிகளிலும் முதல் பரிசு பெற்றார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்டம் நடத்திய அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியிலும் 25 வயதிற்கு மேற்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றார். இன்று 07.01.2025 மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.இரா.ஸ்டாலின் வெற்றி பெற்ற பெண் தலைமை காவலரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.