கோம்பு பள்ளத்தில் வெள்ளையடிக்கும் பணி துவக்கம்

குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் வெள்ளையடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Update: 2025-01-08 14:17 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கோம்பு பள்ளத்தில் வெள்ளையடிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் கோம்பு பள்ளம் எனும் கழிவுநீர் பள்ளம் கத்தேரி பகுதியில் இருந்து, ஓலப்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளி, நடராஜா நகர், சின்னப்பநாயக்கன் பாளையம், வழியாக இடைப்பாடி சாலை, உடையார்பேட்டை, தம்மண்ணன் சாலை, பெருமாபாளையம் புதூர், மணிமேகலை வீதி வழியாக சென்று காவிரி ஆற்றில் இணைகிறது. இதில் மேற்படி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் இதன்வழியாக சென்றுதான் காவிரி ஆற்றில் கலக்கிறது. இடைப்பாடி சாலை சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பாலம் பகுதியில் துவங்கி, போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலம் வரை பக்கவாட்டு சுவர் அமைத்து, தரை தளத்தில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், தினசரி காய்கறி மார்க்கெட், அரசு மருத்துவமனை, ஆகியன இந்த கோம்பு பள்ளம் இருக்கும் இடத்தில் இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாக உள்ளது. இங்கு கழிவுநீர் துர்நாற்றம் வீசாமல் இருக்கவும், பக்கவாட்டு சுவர் அசுத்தம் இல்லாமல் தூய்மையாக இருக்கவும், நகராட்சி நிர்வாகம் சார்பில், இந்த கோம்பு பள்ளத்தின் பக்கவாட்டு சுவற்றில் மற்றும் தரை தளத்தில் வெள்ளையடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் காண்பதற்கு அழகாகவும், துர்நாற்றம் வீசாமலும் இருப்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News