சொர்க்க வாசல் திறப்புக்கு 15 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பனி தீவிரம்
குமாரபாளையத்தில் சொர்க்க வாசல் திறப்புக்கு 15 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரி பாண்டுரங்கர் கோவிலில் ஜன. 10ல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கபடுவது வழக்கம். இதற்காக லட்டு தயாரிக்கும் [அணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசி விழா ஜன. 9ல் துவங்கவுள்ளது. பஜனையுயடன் திருவீதி உள்ள நடைபெறவுள்ளது. ஜன. 10ல் அதிகாலை 05:00 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படவுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் லட்டு வழங்கப்படும். இதற்காக 15 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.