கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கால்பந்துப் போட்டியில் முதலிடம்

கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கால்பந்துப் போட்டியில் முதலிடம்

Update: 2025-01-08 14:31 GMT
கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெரியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான மகளிர் கால்பந்துப் போட்டியில் நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அணிகள் கலந்துகொண்டனர். இதில் கே.எஸ்.ஆர் மகளிர் கல்லூரி அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இப்போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவிகளை கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு. ஆர். சீனிவாசன் அவர்கள், துணைத்தாளாளர் திரு. சச்சின் சீனிவாசன், நிர்வாக இயக்குனர் பேராசிரியர் மோகன் அவர்கள், தலைமை திட்ட நோக்க அதிகாரி முனைவர் எஸ். பாலுசாமி, மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன். மற்றும் கல்லூரியின் துணை முதல்வர், இயக்குனர்கள், கல்வி நிறுவன உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் எஸ்.முத்துக்கண்ணன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் முனைவர் எம். நிர்மலா, எஸ் கார்த்திகா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பாராட்டினர். மேலும் இவ்வணியில் விளையாடிய ஏழு மாணவிகள் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியின் பெரியார் பல்கலைக்கழக அணியில் தேர்வு செய்யப்பட்டு பல்கலைக்கழக அளவிலான மகளிர் கால்பந்துப் போட்டியில் பங்கேற்றனர்.

Similar News