ஆடு மாடுகளை தாக்கும் கொடிய நோய் விவசாயிகள் வேதனை
காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆடு, மாடுகளை தாக்கும் கொடிய நோய் - புகார் கொடுத்தாலும் மருத்துவர்கள் வரவில்லை என விவசாயிகள் வேதனை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மரவாபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்மங்குலிபாளையத்தில் அரிய வகை நோய்கள் தாக்கி 10 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகி சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது மாடுகளையும் பல்வேறு நோய் தொற்றுகள் தாக்குவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.மேலும் அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இருப்பதில்லை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூறினாலும் வரவில்லை என குற்றசாட்டு. கால்நடை மருத்துவமனை அமைத்து தர கோரிக்கை. காங்கேயம் அருகே மறவபாளையம் ஊராட்சி செம்மங்குழிபாளையம் பகுதியில் 100க்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்த செம்குழிபாளையம் ஆனது திருப்பூர் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஊரின் எல்லையில் ஒரத்துப்பாளையம் அணை என்ற நொய்யல் ஆறு ஓடுகின்றது. இந்த நொயில் ஆற்றினால் இந்தப் பகுதியில் விவசாயம் பொய்த்து போனது. அதனால் இங்குள்ள விவசாயிகள் கோழி, ஆடு,மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பில் வருமானம் ஈட்டி வருகின்றனர். மேலும் அதிகமாக மாடுகள் வளர்த்து அதிலிருந்து வரும் பாலை எடுத்து ஆவின் பால் பண்ணைக்கு கொடுத்து வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ஆடுகளை நோய் தாக்கப்பட்டு 10க்கு மேற்பட்ட ஆடுகள் பலியாகி உள்ளது. இதனால் இந்த பகுதி விவசாயிகள் வேதனை அடைந்து வந்த நிலையில், தற்போது மாடுகளையும் ஒருவித அரிப்பு நோய், அம்மை நோய் மற்றும் வாயின் கீழ் பகுதியில் காயங்கள் ஏற்படும் நோய்கள் தாக்கப்பட்டு அவைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மேலும் இவர்கள் வசிக்கும் ஊரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய காளியப்ப கவுண்டன் வலசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய உள்ளது. ஆனால் எப்போது மருத்துவமனைக்கு சென்றாலும் அங்கு மருத்துவர்களோ அல்லது பணியாளர்களோ இருப்பதில்லை எனவும் அதைத் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறினாலும் அவர்கள் வருவதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். அதேபோல் அந்த கால்நடை மருத்துவமனையில் போதிய ஊசி மருந்துகள் இல்லை எனவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். மேலும் ஆடு,மாடு போன்ற கால்நடைகளை தனியார் மருத்துவர் மூலம் பணம் கொடுத்து சிகிச்சை பார்க்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக காங்கேயம் பகுதியில் நாய்களின் தொல்லையால் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் பலியாகி விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு மருத்துவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது ஒரு புறம் இருக்கையில் போதிய மருந்துகள் இல்லை என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே பகுதியில் ஒரு முழு நேருமோ அல்லது பகுதி நேர மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றனர்.