காந்திகிராமம் பல்கலையில் 23 முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஜன-14 வரை விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல் சின்னாளபட்டி;
திண்டுக்கல், காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டு 23 முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. சம்பந்தப்பட்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் http://cuet.nta.nic.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். படிப்பு ஒவ்வொன்றிலும் சேருவதற்கான அடிப்படைத்தகுதிகள், குறிப்பேடு, மாணவர்கள் தங்கள் தேர்வு செய்யும் துறைக்கு எந்தெந்த தாள்கள் (test paper) எழுத வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்களை www.ruraluniv.ac.in என்ற பல்கலை இணையதளத்தில் இருந்து பெறலாம். ஜன.,14 வரை விண்ணப்பிக்கலாம்,' என பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது