வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் நினைவிடத்தில் அவரது 295 வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது
சிவகங்கையில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலுநாச்சியாரின் 295 -ஆவது பிறந்தநாளில் அவரது நினைவிடத்தில் உள்ள சிலைக்கு அரசு, அரசியல் கட்சியினா் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அரசு சாா்பில், வேலுநாச்சியாரின் சிலைக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித், மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, திமுக நகா்மன்றத் தலைவா் துரைஆனந்த், துணைத் தலைவா் காா்கண்ணன், திருப்புவனம் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மதியரசன், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் பவானிகணேசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயகாந்தன், அயூப்கான், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் குழந்தைராணிநாச்சியாா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன்உமேஷ் டோங்கரே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதிமுக சாா்பில், முன்னாள் அமைச்சா் பாஸ்கரன், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், நகரச் செயலா் ராஜா உள்ளிட்டோா் வேலுநாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினா். காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மாங்குடி தலைமையில் காங்கிரஸ் நகரத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட துணைச் செயலா் சண்முகராஜன், மகளிா் காங்கிரஸ் மாநில துணைத் தலைவி வித்யாகணபதி உள்ளிட்டோா் வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினா். அமமுக சாா்பில் மாவட்டச் செயலா் தோ்போகிபாண்டி தலைமையிலும், ஓபிஎஸ் அணி சாா்பில் மாவட்டச் செயலா் அசோகன் தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மாவட்டச் செயலா் பாலையா தலைமையிலும் வேலுநாச்சியாா் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை சமஸ்தான வாரிசுதாரா்கள், வேலுநாச்சியாா் வாரிசுதாரா்கள், தேவஸ்தான ஊழியா்கள் சாா்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து வேலுநாச்சியாரின் நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள வீராங்கனை குயிலி உருவச் சிலைக்கும் அனைத்துக் கட்சியினரும் மரியாதை செலுத்தினா்.