அரசு பள்ளி மாணவ மாணவர்களின் கலைத் திருவிழா
அரசு பள்ளி மாணவ மாணவர்களின் கலைத் திருவிழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் மாநில அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா இன்று தொடங்கியது. இந்த திருவிழாவுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் குமார் திட்டம் குறித்து விளக்கிப் பேசினார். நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தமிழக அரசு அரசு பள்ளி மாணவ மாணவிகளின் திறமைகளை வெளியே கொண்டு வரும் வகையில்நடனம் பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி அவர்களில் மாநில அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள்முதல்வரின் கையால் பரிசுகளை பெற உள்ளார்கள் வரும் 24ஆம் தேதி அதற்கான விழா சென்னையில் நடைபெற உள்ளது என்று கூறினார். தமிழகம் முழுவதும் 38 கல்வி மாவட்டங்களில் இருந்து 3747 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு நாமக்கல் மாவட்டம் கே எஸ் ஆர் கல்லூரி வளாகத்தில் 18 அரங்குகளில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் திறமைகளை காண்பித்து வருகிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் சென்னையில் நடைபெற உள்ள பரிசளிப்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மதுரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்ற குழு நாட்டியம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில், திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, திருச்செங்கோடு ஒன்றிய தலைவர் சுஜாதா தங்கவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.