சேலத்தில் நள்ளிரவு கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

போலீசார் பலத்த பாதுகாப்பு

Update: 2025-01-01 05:33 GMT
புத்தாண்டு பிறப்பையொட்டி நள்ளிரவு 12 மணியளவில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாநகரில் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு மேற்பார்வையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 175 ஊர்க்காவல் படையினர் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் சத்தம் எழுப்பியபடி சென்ற இளைஞர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாலிபர்கள் வாகனங்களில் சாகசம் என்ற பெயரில் தாறுமாறாக செல்வதை தடுக்க புதிய பஸ் நிலையம், 5 ரோடு, 4 ரோடு உள்ளிட்ட பகுதியில் உள்ள மேம்பாலத்தில் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Similar News