புத்தாண்டை ஒட்டி சேலத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை
நீண்ட வரிசையில் இன்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள்
புத்தாண்டை ஒட்டி சேலத்தில் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு இன்று தொடங்கியது இதையொட்டி நேற்று நள்ளிரவு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. தொடர்ந்து இன்று காலை டவுன் ராஜகணபதி கோவில் தங்க கவச அலங்காரத்திலும், கோட்டை மாரியம்மன் கோவில் தங்க கவச அலங்காரத்திலு், எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் தங்க கவச அலங்காரத்திலும், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில்அதிகாலை முதல் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து வண்ண வண்ண மலர்களால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.