வேகமாக சென்ற வாகனம் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த டூ வீலர் மோதி விபத்து.
வேகமாக சென்ற வாகனம் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த டூ வீலர் மோதி விபத்து.
வேகமாக சென்ற வாகனம் சிக்னல் ஏதும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால் பின்னால் வந்த டூ வீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள பச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் சோழி பிரகாஷ் வயது 32. இவர் டிசம்பர் 30ஆம் தேதி மதியம் 12 மணியளவில், கரூர் - மதுரை சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் காக்காவடி அருகே உள்ள வேலம்மாள் பள்ளி அருகே சென்றபோது, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், பாப்பக்காப்பட்டி பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மண மூர்த்தி வயது 57 என்பவர் வேகமாக ஓட்டி வந்த போர்ஸ் க்ரஸர் என்ற சரக்கு மற்றும் ஆட்களை ஏற்றி செல்லும் வாகனம், சோழி பிரகாஷ் ஓட்டிச் சென்ற டூவீலரை வேகமாக சென்று முந்தியது. இந்நிலையில் வேகமாக சென்ற அந்த வாகனத்திலிருந்து எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் திடீரென பிரேக் இட்டதால், சோழி பிரகாஷ் ஒட்டி சென்ற டூவீலர், லட்சுமண மூர்த்தி ஓட்டிச் சென்ற போர்ஸ் க்ரஸர் வாகனத்தின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சோழி பிரகாசுக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக சோழி பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி, வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்திய லட்சுமண மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.