வேலகவுண்டம்பட்டி மதுபான கடை அருகில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் , தமிழ் புலிகள் கட்சி கண்டனம்

Update: 2025-01-04 05:25 GMT
வழக்கு விசாரணை

நாமக்கல் மாவட்டம் சிங்கிலிபட்டி கிராமம் அருந்ததியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மின்பொருள் பொறியாளர் சஞ்சய் என்பவர் கடந்த 01-01-2025 தேதி வேலகவுண்டம்பட்டி மதுபான கடை அருகில் இரவில் படுகொலை செய்யப்பட்டார்.

தமிழ்ப்புலிகள் கட்சியும், முற்போக்கு இயக்கங்களும், வெகுஜன மக்களும் குறைந்தபட்ச நீதியாவது கிடைக்காமல் படுகொலை செய்யப்பட்ட சஞ்சய் என்பவரின் உடலை உடல்கூறு செய்து பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று போராட்டத்தில்  ஈடுபட்டது . அதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டனர்.போராட்டம் என்பது இன்றும் நீடித்தது.



சமூக விரோத செயலில் ஈடுபடும் கொலை குற்றவாளிகள் மூவரும், சாதி வெறி பிடித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள்.

போராட்டக்காரர்களின் பெரும்பான்மையான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதால் படுகொலை செய்யப்பட்ட சஞ்சய் என்பவரின் உடலை இன்று பெற்றுக் கொண்டு நாமக்கல் மின்மயானதில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில்  (ப.செந்தமிழன்) சேலம்_ நாமக்கல் மண்டல செயலாளர் தோழர் உதயபிரகாஷ், நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் தோழர்.குமரவேல், தோழர் வழக்கறிஞர் அருண், வழக்கறிஞர் கார்த்திக், நாமக்கல் மாவட்டம் பொறுப்பாளர் தம்பி லோ. மாதேஸ்வரன்...


எலச்சிப்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர் அருள்நம்பி, மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோழர் ப.செல்வராஜ், மோகனூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் உள்ளிட்டோர் காலை முதல் இரவு வரை பாதிக்கப்பட்ட ஊர் மக்களோடும், நீதிக்கான போராட்ட களத்தில் களத்தில் நின்றார்கள் . 


போராட்டக் களத்தை பார்வையிடுவதற்காக தமிழ்ப்புலிகள் கட்சி_யின் மாநில வணிகர் அணி செயலாளர் அண்ணன் சண்முகம், மாநில அமைப்பு துணைச் செயலாளர் தோழர் ஹிட்டாச்சி சிவா ஆகியோர் வருகை தந்து நிலவரம் குறித்து விசாரித்து சென்றார்கள்.

கிங் நியூஸ் .........24x7 

Tags:    

Similar News