கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி துறையின் பணிகள் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி துறையில் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் எண்ணிக்கை, பணி நடைபெறும் விபரம், திட்ட மதிப்பீடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.மேலும், மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பிலான 2,965 வீடுகள் பணிகள், ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் 2,449 வீடுகள் ரூ.13.85 கோடி மதிப்பிலான பழுது நீக்கும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார். தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் கிராமங்களில் ரூ.3.89 கோடி மதிப்பிலான 412 விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், ரூ.4.27 கோடி மதிப்பிலான அரசு பள்ளிகளின் சுற்று சுவர் அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து நிலுவையில் உள்ள பணிகளை முழுமையாக முடித்து விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.