ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசோதனை தொடக்கம்.

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது

Update: 2025-01-06 08:33 GMT
மதுரை அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை துறை உதவி இயக்குனர் பழனிவேலு மற்றும் மருத்துவர் பாபு ஆகியோர் அடங்கிய குழுவினர் கால்நடைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டு போட்டியில் தகுதி பெரும் காளைகளுக்காக உயரம் திமில் பல்வரிசைகள் கண் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு தரம் உறுதி செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. வரும் தை முதல் நாள் அன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக மதுரை மாவட்டம் நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து அவனியாபுரம் பகுதியில் பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் கால்நடைத்துறை சார்பில் பல்வேறு ஊர்களில் காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இன்று(ஜன.6) வரை அவனியாபுரம் பகுதியில் சுமார் 260 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் பரிசோதனை செய்யப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு மாடுகள் சுமார் 20,000 மேற்பட்ட காளைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

Similar News