பேருந்து கவிழ்ந்து விபத்து

விபத்து

Update: 2025-01-04 05:26 GMT
மணலூர்பேட்டை அடுத்த அருதங்குடி அருகே திருவண்ணாமலை-தியாகதுருகம் சாலையில், மேல் மருவத்தூர் கோவிலுக்கு சென்று பக்தர்களுடன் திரும்பிவந்த தனியார் பேருந்து மின்கம்பத்தில் மோதி,கவிழ்ந்து விபத்து.10-க்கும் மேற்பட்டோர் காயம். சங்காரபுரம் அடுத்த மோட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பேருந்தில் மேல்மருத்வத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்றுவிட்டு மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை தியாகதுருகம் சாலையில் அருதங்குடி அருகே திரும்பி வரும்போது பேருந்து எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து போலீசார் மற்றும் ஊர்பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பேருந்து கவிழ்ந்ததிற்க்கான காரணம் குறித்து திருப்பாலபந்தல் போலீசார் விசாரணை. நள்ளிரவு நேரத்திலும் ஊர்பொதுமக்கள் ஓடோடி வந்து உதவியது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.

Similar News