பீளமேடு: சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் விளையாட்டு நாள் விழா !
பீளமேடு சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM)-ல் விளையாட்டு நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது
பீளமேடு சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி (SVPISTM) இல் நேற்று விளையாட்டு நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது.கல்லூரியின் இயக்குநர் முனைவர் பி. அல்லி ராணி தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், குழு உணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.மாணவர்கள் காட்டன், சில்க், ஜூட் மற்றும் விஸ்கோஸ் அணிகளாக பிரிந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். சிலம்பம் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.கிரிக்கெட், பேட்மிண்டன், கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில், சில்க் அணி வெற்றி கோப்பையை கைப்பற்றியது.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூரைச் சேர்ந்த சுலோசன்னா காட்டன் ஸ்பினிங் மில்ஸ் இன் கூட்டு நிர்வாக இயக்குநர் திரு. பிரித்வி கிருஷ்ணகுமார், விளையாட்டு மனப்பான்மை மற்றும் வெற்றியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் விளையாட்டு உலகத்தை மாற்றுவதற்கும், ஊக்கமளிப்பதற்கும் வல்லதொரு சக்தி என்ற கருத்தை மேற்கோள் காட்டி, மாணவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினார்.