வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஈரோடு மாவட்டத்தில் 19.77 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் 12 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்ப்பு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29.10.2024-ல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஈரோடு மாவட்டத்திலுள்ள 2,222 வாக்குச்சாவடிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4, 5, 25, 26 ஆகிய 4 நாட்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேற்படி சிறப்பு முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், ஆதார் எண் பதிவு, திருத்தம் போன்ற வாக்காளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு உரிய படிவங்கள் பெறப்பட்டது. மற்ற நாட்களிலும் நேரிலும் இணைய வழிகளிலும் மேற்படி கோரிக்கைக்காண படிவங்களை பொதுமக்கள் சமர்ப்பித்தனர்.அதன் பேரில் மேற்படி படிவங்களின் மேல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுதியான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சிறப்பு சுருக்க திருத்த காலகட்டத்தில் 35,855 பெயர் சேர்த்தல் படிவங்களும், 23,112 பெயர் நீக்கல் படிவங்களும், 11,851 திருத்தங்கள் தொடர்பான படிவங்களும் ஆக மொத்தம் 70,818 படிவங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 12,746 வாக்காளர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 636 ஆன் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 760 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 உள்ளனர்.ஈரோடு மேற்கு தொகுதியில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 354 ஆன் வாக்காளர்களும், 1 லட்சத்து 54 ஆயிரத்து 7 14 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48 பேர் என மொத்தம் 3 லட்சத்து 1,116 வாக்காளர்கள் உள்ளனர். மொடக்குறிச்சி தொகுதியில் 1 லட்சத்து 8,8 39 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 829 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,லட்சத்து 28 ஆயிரத்து 680 வாக்காளர்கள் உள்ளனர். பெருந்துறை தொகுதியில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 478 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 23 ஆயிரத்து 367 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 854 வாக்காளர்கள் உள்ளனர்.பவானி தொகுதியில் 1 லட்சத்து 18, 110 ஆன் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 24,088 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 218 வாக்காளர்கள் உள்ளனர். அந்தியூர் தொகுதியில் 1 லட்சத்து 8, 230 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 12,662 பெண் வாக்காளர்களும், 30 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 922 வாக்காளர்களும் உள்ளனர். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 59 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 148 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலினத்தவர்கள் என 2 லட்சத்து 56 ஆயிரத்து 220 வாக்காளர்கள் உள்ளனர். பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 650 ஆன் வாக்காளர்களும், 1 லட்சத்து 36 ஆயிரத்து 303 பெண் வாக்காளர்களும், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் என இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 9 லட்சத்து 55 ஆயிரத்து 356 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து 21 ஆயிரத்து 87 1 பெண் வாக்காளர்களும், 192 மூன்றாம் பாலினத்தவர்கள் என 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.