குருபரப்பள்ளி: நடந்து சென்றவர் மீது கார் மோதி தொழிலாளி பலி.

குருபரப்பள்ளி: நடந்து சென்றவர் மீது கார் மோதி தொழிலாளி பலி.

Update: 2025-01-06 08:43 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அடுத்துள்ள நடுசா லையை சேர்ந்தவர் வெங்கடாசலபதி (44) தொழிலாளியான. இவர் சம்பவம் அன்று கிருஷ்ணகிரி - ஓசூர் சாலையில் பையனப்பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த வெங்கடாசலபதி சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News