இலவச வீட்டு மனை பட்டா வேண்டி வெண்ணந்தூர் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் தங்கசாலை பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வாடகை வீடுகளில் கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருகிறார்கள் இப்பகுதி மக்கள் விவசாய தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா வெண்ணந்தூர் தங்கசாலை பகுதியில் இருக்கும் பொதுமக்கள் வாடகை வீடுகளில் கூட்டுக் குடும்பங்களாக வசித்து வருகிறார்கள் இப்பகுதி மக்கள் விவசாய தினசரி கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள் தினசரி கூலி வேலையில் வரும் வருமானத்தை வைத்து சாப்பாடு செலவிற்கும் குடும்ப செலவிற்கும் போதாத நிலையில் வாழ்ந்து வாழ்ந்து வருவதாகவும் இதனால் வாடகை கட்ட கூட மிகவும் சிரமப்பட்டு வருவதாக பகுதி மக்கள் தெரிவித்தனர் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் மூன்று குடும்பங்களாக வசித்து வருகிறார்கள் இதனால் மிகவும் சிரமப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் பொதுமக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் விதமாக இலவச வீட்டு மனை பட்டா வழங்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்