வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் முன்னிலையில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று வெளியிட்டார்
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு சுருக்கு முறை திருத்தும் 2025 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் தொடர்பாக அக்., 29 முதல் நவ., 28 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் அக்., 29 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஆண்கள் பெண்கள் என, 12,63,740 வாக்காளர்களாக இருந்தனர். இதில் பெயர் சேர்த்தலில் 25,301, பெயர் நீக்கலில், 11,124, திருத்தம் செய்வதில் 6,187 என, 42,612 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 2,031 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், பாலக்கோடு, 2,44,243, பென்னாகரம், 2,52,043, தருமபுரி, 2,68,424, பாப்பிரெட்டிப்பட்டி, 2,62,873, அரூர், 2,50,334 என மாவட்டத்தில் உள்ள, 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,43,962 ஆண் வாக்காளர்களும், 6,33,783 பெண் வாக்காளர்களும், 172 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தமாக 12,77,917 வாக்காளர் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று தெரிவித்தார். இதில், இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் ஆட்சியர் வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, கோட்டாட்சியர் காயத்ரி மற்றும் தேர்தல் அதிகாரிகள் கட்சிப் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.