நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை சார்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் ஜன 01 முதல் 31 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து துவங்கிய சாலை பாதுகாப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி IAS துவக்கி வைத்தார். தலை கவசம் அணியவேண்டும். உயிரை காக்க ஹெல்மெட் போட வேண்டும். வாகனத்தில் செல்லும்போது செல்பேசி பேசக்கூடாது மது அருந்தி வாகனம் ஓட்ட கூடாது மிக வேகமாக செல்ல கூடாது. காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவேண்டும். ஓடும் பருந்தில் ஏறக்கூடாது படியில் பயணம் செய்யக் கூடாது. ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடவேண்டும். சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திபேரணியில் பங்கேற்றனர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி இலக்கியம் பட்டியல் பாரதிபுரம் அரசு மருத்துவமனை நேதாஜி பைபாஸ் சாலையின் வழியாக தருமபுரி ஆவின் நிலையத்தை வந்தடைந்தது