விஜய் வசந்த் எம்.பி புத்தாண்டு நல்வாழ்த்துகள்

கன்னியாகுமரி

Update: 2025-01-01 11:04 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி:-         ஒவ்வொரு புது வருடமும் நமது வாழ்வில் புது நம்பிக்கையை தருகிறது. கடந்த ஆண்டு நாம் சந்தித்த தடைகள் மற்றும் சோதனைகளை கடந்து புது வருடத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறோம். இந்த வருடம் மிகவும் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நலம், இன்பம், தனம் நிறைந்த புத்தாண்டாக 2025 அமையட்டும்       உங்கள் தனிப்பட்ட வாழ்வில் வெற்றிகள் உங்களை தேடி வரட்டும். உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிரம்பி வழியட்டும். சமூகத்தில் சகோதரத்துவம் மலர்ந்து, பகைகள் மறைந்து அமைதி நிலவிட வாழ்த்துகிறேன்.  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என கூறியுள்ளார்.

Similar News