கொசத்தலை ஆற்று தடுப்பணையில் அருவி போல் கொட்டும் வெள்ள நீரில் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்
கொசத்தலை ஆற்று தடுப்பணையில் அருவி போன்று கொட்டும் வெள்ள நீரில் ஆங்கில புத்தாண்டு தின விடுமுறையில் குடும்பம் குடும்பமாய் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்;
கொசத்தலை ஆற்று தடுப்பணையில் அருவி போன்று கொட்டும் வெள்ள நீரில் ஆங்கில புத்தாண்டு தின விடுமுறையில் குடும்பம் குடும்பமாய் குளித்து மகிழ்ந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்டம் சீமாபுரம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தடுப்பனை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெய்த கன மழை காரணமாக பூந்தி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட வெள்ள நீர் தடுப்பணையில் நிரம்பி அருவி போன்று ஓடிவரும் நிலையில் அதில் ஆபத்தை உணராமல் வெள்ள நீரில் பொதுமக்கள் குளித்து வந்த நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் பொன்னேரி திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இன்று விடுமுறையை கொண்டாடும் வகையில் தடுப்பணையில் அருவி போன்று கொட்டும் நீரில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது ஆற்றில் வெள்ள நீர் குறைந்த அளவில் செல்வதால் மகிழ்ச்சியுடன் குடும்பம் குடும்பமாய் வந்து விடுமுறையை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது