ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் குவிந்த பக்தர்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2025-01-01 14:32 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பிள்ளையார்பட்டியில் உலக பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோயில். இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு நடை கோவில் திறக்கப்பட்டது. மூலவர் கற்பகவிநாயகர் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் நிலையில் தமிழர்களின் முதல் கடவுளாக போற்றப்படுகின்ற விநாயகப் பெருமானை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலே வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தங்க கவச அலங்காரத்தில் காட்சி தரும் கற்பக விநாயகரை தரிசித்து வருகின்றனர். கற்பக விநாயகர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தமிழக முழுவதும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நண்பகல் தரிசிக்க வந்த திரைப்பட நடிகரும், இயக்குனருமான சசிகுமார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை தரிசனம் செய்தார். அப்போது அவரை கண்ட பக்தர்கள், மகிழ்ச்சியடைந்தனர். அனைவரும் சசிக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். அனைவரின் அன்பையும் ஏற்றுக் கொண்ட சசிக்குமார், தொடர்ந்து தரிசனத்திற்கு வரிசையில் காத்திருந்த பக்தர்கள், பாதுகாப்பு பணியாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிலர் தங்களின் குழந்தையை சசிக்குமாரிடம் கொடுத்து, அவரிடம் பெயர் வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். அனைவரின் அன்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். பக்தர்களின் வசதிக்காக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு சிறப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் கோவில் வளாகத்தை சுற்றிலும் 30 க்கும் மேற்பட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர் .

Similar News