சிவன்மலை கிராம ஊராட்சிக்கு சர்வதேச ஐஎஸ்ஓ தரச் சான்று கலெக்டர் வாழ்த்து
சிவன்மலை கிராம ஊராட்சிக்கு சர்வதேச ஐஎஸ்ஓ தரச் சான்று கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்;
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவன்மலை ஊராட்சி சர்வதேச அங்கீகாரமான ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலேயே சர்வதேச தரச் சான்று பெரும் 3வது ஊராட்சி ஆகும்.ஊராட்சியின் சிறந்த மக்கள் சேவை, சிறந்த நிர்வாக திறன், தரமான செயல்பாடுகள், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து திருப்திப்படுத்திய வகையிலும் சிவன்மலை ஊராட்சிக்கு இச்சா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராஜன், ஊராட்சி தலைவர் துரைசாமி, துணைத்தலைவர் சண்முகம் செயலாளர் காளியம்மாள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.