நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிக்கு ஐந்து நட்சத்திர விருதினை மாவட்ட ஆட்சியர் வழங்கி பாரட்டினார்.

நாமக்கல் கீரம்பூரில் இயங்கி வரும் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளிக்கு ஐந்து நட்சத்திர விருதினை வழங்கி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பாராட்டி வாழ்த்தினார்.;

Update: 2025-12-24 13:46 GMT

மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையின் 2020 அடிப்படையில் (NEP) தேசிய அளவில் கல்வியில் புதிய திட்டங்களையும், பாடத்திட்டங்களில் மாற்றத்தையும் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கல்வி கற்பதற்கான சூழல், தேவையான கட்டமைப்பு, மாணவ, மாணவியர்களின் அறிவார்ந்த கற்றலுக்கான படிநிலைகள், தூய்மையான இருப்பிடம், சுகாதாரமான குடிநீர் என அனைத்தையும் வலியுறுத்தி பல திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக பள்ளிகள், கல்லூரிகளில் சுற்றுச்சூழலை ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. “மத்திய அரசின் ஸ்வச் ஏவம் ஹரித் வித்யாலயா” என்ற அமைப்பு நட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டஅளவில் உள்ள பள்ளி கல்லூரிகளை ஆய்வுசெய்து வருகின்றது. அந்த வகையில் நமது நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரில் ஆய்வு செய்தனர். அதில் நமது நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளிக்கு சுத்தமான குடிநீர் 86.36ஃவழங்குதல், சுகாதாரமான கழிப்பறைகள்,92.59% சுற்றுப்புரத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்துக்கொள்ளுகதல், எதிர்காலத்தில் பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படை செயல் திறன் கொண்ட கட்டமைப்போடு பள்ளி செயல்படுகிறது என்று 100% ஆய்வுக்குழுவால் சான்றளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 8 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன, அதில் 6 அரசு பள்ளிகள், ஒருமெட்ரிக் பள்ளி, ஒரு சிபிஎஸ்இ பள்ளி அது நமது நவோதயாப் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.சான்றிதழை நாமக்கல் மாவட்ட ஆட்சியர்    வழங்கினார். பள்ளி முதல்வர் பெற்றுக்கொண்டார். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) அவர்களும் உடன் இருந்தனர். இந்த நிகழ்வு பள்ளி நிர்வாத்தினருக்கும், ஆசிரியர்களுக்கும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும். அனைத்துப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்தது.

Similar News