மானிய விலையில் ஜக்கார்டு பெட்டி பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழங்கினார்

கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் ஜக்கார்டு பெட்டி பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வழங்கினார்;

Update: 2025-01-02 03:18 GMT
திருப்பூர் அருகே கணபதி பாளையம் ஊராட்சியில் உள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் சி ஹெச் 32 இல் உறுப்பினராக உள்ள கைத்தறி நெசவாளருக்கு மானிய விலையில் ஜக்கார்டு பெட்டிகள் வழங்கப்பட்டது. இவற்றை பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கிழக்கு ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ரவி தண்டபாணி, தேவராஜ், கிளைக் கழக செயலாளர் சிவராஜ், பரமேஷ் பாபு, சண்முகம் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News