சிவகங்கை அருகே மலைப்பகுதியில் திடீர் அருவி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி மலைப்பகுதியில் திடீர் அருவி உருவாகியுள்ளது;
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலை, ஒடுவன்பட்டி பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதையடுத்து ஒடுவன்பட்டி மலையில் திடீர் அருவி உருவாகியுள்ளது. வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த அருவியில் ஒடுவன்பட்டி, பிரான்மலை, கிருங்காகோட்டை, வண்ணாரிருப்பு பகுதி மக்கள் குளித்து மகிழ்கின்றனர். மேலும், இந்த அருவியில் இருந்து வெளியேறும் தண்ணீரால் பிள்ளையார் ஊருணி நிரம்பி மறுகால் பாய்கிறது.