திருப்பத்தூரில் சிக்னல் விளக்கு திறப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் உதயமான பிறகு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பொறுப்பு டி.எஸ்.பி.. பொதுமக்கள் மகிழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டம் உதயமான பிறகு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த போக்குவரத்து சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பொறுப்பு டி.எஸ்.பி.. பொதுமக்கள் மகிழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக உதயமான பிறகு நீண்ட நாட்களாக பொதுமக்கள் மத்தியில் திருப்பத்தூர் வாணியம்பாடி ரோடு திருப்பத்தூர் திருவண்ணாமலை ரோடு திருப்பத்தூர் தர்மபுரி ரோடு திருப்பத்தூர் கிருஷ்ணகிரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஏழு இடங்களுக்கும் மேலாக பொதுமக்கள் சாலைகளை கடக்க முடியாமல் முறையான சிக்னல் இல்லாமல் அவதியுற்று வந்தனர். திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் முக்கிய சாலைகளை கடந்து வரும் சூழ்நிலையில் பல வருடங்களாக போக்குவரத்து ஏற்படும் இடங்களில் சிக்னல் விலங்குகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.. இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மாவட்ட மேற்கொண்ட முயற்சியில் தனியார் நிறுவன உதவியுடன் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏழு முக்கிய சாலை சந்திப்புகளில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 24 கம்பங்களில் ஏறக்குறைய 100 மின் சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது இதனை இன்று திருப்பத்தூர் டிஎஸ்பி பொறுப்பு சுரேஷ் தொடங்கி வைத்தார் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...