சேலத்தில் மின் அமைப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
மின் சிக்கனம் குறித்து விளக்கம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் மின்சிக்கனம் குறித்து மின் அமைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. சேலம் ஆர்.ஆர். எலக்ட்ரிக்கல் ஏஜென்சி சார்பில் நடந்த கருத்தரங்கை விகான், வி4 நிறுவனங்களின் தமிழ்நாடு மாநில வினியோகஸ்தர்கள் ராஜ்குமார், ராகுல், பி.எஸ்.ஜி. மோட்டார் நிறுவன பொதுமேலாளர் ரவி, வேணுகிருஷ்ணன், தமிழ்நாடு மின் அமைப்பாளர் சங்க மாநில செயலாளர் கோவிந்தன், ஆர்.ஆர்.எலக்ட்ரிக்கல் ஏஜென்சியின் நிர்வாக இயக்குனர் ஆர்.ரங்கராஜன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். கருத்தரங்கில் மின்சாரத்தை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது? அதற்கு எப்படிப்பட்ட நவீன சென்சார் பல்புகள், சோலார் பல்புகள், சோலார் பம்பு செட்டுகளை பயன்படுத்துவது குறித்து கருத்தரங்கில் விளக்கி கூறப்பட்டது. பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் ½ எச்.பி. மோட்டார் முதல் 100 எச்.பி. மோட்டார் வரை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்தும் விளக்கி கூறப்பட்டது. விகான், வி4 நிறுவனத்தின் அமல்ராஜ் பேசும் போது, மின்கசிவு, உயிர் பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசினார். முடிவில் ஆர்.ஆர்.எலக்ட்ரிக்கல் ஏஜென்சியின் உரிமையாளர்கள் ஆர்.ராமகிருஷ்ணன், ஆர்.ராம்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.