குன்னமலை பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
குன்னமலை பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார்.;
பரமத்தி வேலூர், ஜன. 3: பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி யூனியன் அலுவலகத்தில் குன்னமலை பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர், 9 வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கலந்து ரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. குன்னமலை பஞ்சாயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் பெண்கள்ஊராட்சி செயலாளரும் பெண். கலந்துரையாடல் நிகழ்ச்சி க்கு சிறப்பு விருந்தினராக நாமக்கல் கலெக்டர் உமா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது நாமக்கல் மாவட் டத்திலேயே குன்னமலை பஞ்சாயத்து தலைவர், துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உட்பட அனைவரும் பெண்களாக உள்ளனர். இந்த பஞ்சாயத்தில் அனைவரும் பெண்களாக தேர்ந்தெடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்களை வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காத நிலையில் உள்ளாட்சி பதவிகளுக்கு பெண்களை நிறுத்தி அவர்களை வெற்றி பெற செய்து இருப்பது பெருமையாக உள்ளது.இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் முடியும் நிலையில் அவர்களுடன் கலந்துரையாட வேண்டி உள்ளது. எனவே பெண்கள் அதிக அளவில் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் நின்று வெற்றி பெற்று பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா குன்னமலைக பஞ்சாயத்து தலைவர் பூங்கொடி குணசேகரன், துணைத் தலைவர் லட்சுமி பஞ்சாயத்து கவுன்சிலர்கள், செயலர் பரிமளம் மற்றும் பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு கேடயம், வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் வடிவேல், பரமத்தி, கபிலர்மலை ஒன்றிய அட்மா குழு தலைவர்கள் தனராசு, சண்முகம், பரமத்தி யூனியன் சேர்மன் திலகவதி, பிடிஓ கிருஷ்ணன், குன்னமலை பஞ்சாயத்து செயலர் மற்றும் பஞ்சாயத்து 9 பெண் கவுன்சிலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.