ஞாயிற்றுக்கிழமை ஆதார் மையம் செயல்படும்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் வருகின்றன ஜனவரி-5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆதார் மையம் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டத்தில் புதிய ஆதார் எடுக்கவும், ஆதார் கார்டு உள்ளவர்கள் ஆதார்களில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், மாவட்டம் முழுவதும் ஆதார் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவ்வாறு செயல்படும் ஆதார் மையங்களின் வாயிலாக, பொதுமக்கள் தங்களது ஆதார் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொண்டும், புதிதாக ஆதார் கார்டு பெறுவதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்பட்டு ஆதார் சேவை மையங்களானது ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செயல்படுவதில்லை. வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்கென விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும், ஒவ்வொரு தாலுகா வாரியாக சுழற்சி முறையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வருகின்றன ஜனவரி-5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் ஆதார் மையம் வழக்கம் போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.