அகில இந்திய சைனிக் பள்ளிக்கு நுழைவுத் தேர்வு

சிவகங்கை    மாவட்டம், அகில இந்திய சைனிக் பள்ளியில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள்  சேர்க்கைக்கான நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-01-04 12:18 GMT
சிவகங்கை    மாவட்டம், அகில இந்திய சைனிக் பள்ளியில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்  சேர்க்கைக்கான நுழைவுத்தேர்விற்கு வருகின்ற 13.01.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தேசிய தேர்வு நிறுவனத்தின் மூலம், அகில இந்திய சைனிக் பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்  சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு  நடைபெறவுள்ளது. அகில இந்திய சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வின் (AISSEEE-2025) அட்டவனை தேர்வு தேதி National Testing Agency இணையதளத்தில்  பின்னர் அறிவிக்கப்படும் தேர்வு முறை கேள்விகுறி வகையிலான எழுத்துத்தேர்வு  (OMR Method) தேர்வு நடைபெறும் மையங்கள் இந்தியா  முழுவதும் 190 நகரங்களில் ஆறாம் வகுப்பில் சேர்க்கைக்கான தகுதி விண்ணப்பதாரர் 31.03.2025 தேதியின்படி  10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும்.     ஓன்பதாம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதி விண்ணப்பதாரர் 31.03.2025 தேதியின்படி  13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும்.  அங்கீகரிக்ப்பட்ட பள்ளியில் 8ம் வகுப்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு கட்டணம் பொது/ஓபிசி (என்சிஎல்)/பாதுகாப்பு/ முன்ளாள் இராணுவ வீரர்கள் -800/- ஆதிதிராவிடர் / பழங்குடியினர் -600/- ஆன்லைனில் விண்ணப்பப் படிவங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 13.01.2025 (மாலை 5.00 மணி வரை) ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி  தேதி 14.01.2025 (முற்பகல் 11.50 ) தேர்வு கட்டணத்தை டெபிட் / கிரெடிக் கார்டு அல்லது இன்டெர்நெட் பேங்கிங்/ யுபிஐ மூலம் ஆன்லைனில்  செலுத்தலாம். தேர்வுக்கான திட்டம் / காலம் / மொழிகள் /பாடத்திட்டம், சைனிக் பள்ளிகளின் விபரம்  / புதிய  சைனிக் பள்ளிகளின் பட்டியல், அவற்றின் தற்காலிக சேர்க்கை/  இட ஒதுக்கீடு / தேர்வு மையங்களின் விபரம் / தேர்ச்சி விபரம்/ தேர்வு தொடர்பாக தகவல்களை https://exams.nta.ac.in/AISSEE/- என்ற இணையதள முகவரியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அகில இந்திய சைனிக் பள்ளியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்  சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் https://exams.nta.ac.in/AISSEE/- என்ற இணையதள முகவரியின் வாயிலாக வருகின்ற 13.01.2025 அன்று  மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News