ஐ.டி. நிறுவன ஊழியர் கொலை தனிப்படை போலீசார் விசாரணை தீவிரம்.
ஐ.டி. நிறுவன ஊழியர் கொலை தனிப்படை போலீசார் அமைத்து விசாரணை தீவிரம்.;
பரமத்தி வேலூர், ஜன. 4: பரமத்திவேலூர் அருகே ஐ.டி. நிறுவன ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பரமத்திவேலூர் அருகே உள்ள சிங்கிலிபட்டியை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவருடைய மகன் சஞ்சய் (வயது 22) இவர்கோவையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவ னத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புத்தாண்டு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி இரவு வேலகவுண்டம் பட்டியில் உள்ள டாஸ்மாக்கடை அருகே சஞ்சய்யுடன் சிலர் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அவரை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே சஞ்சய் பரிதாபமாக |உயிரிழந்தார். சஞ்சயை வெட்டிக்கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து தப்பியோடிய மர்ம கும்பலை கண்டுபிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில் ஒரு தனிப்படை குழுவினரும், பர மத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில் வேலகவுண்டன்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பரமத்தி இன்ஸ்பெக்டர் இந்திராணி, வேலூர் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினரும் கொலையாளிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த தனிப்படை குழுவினர் நேற்று சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.