வானுார் அருகே டாடா ஏஸி வாகனம் கவிழ்ந்து விபத்து

டாடா ஏஸி வாகனம் கவிழ்ந்து விபத்து;

Update: 2025-01-05 03:04 GMT
வானுார் அடுத்த பூத்துறையில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோடு நோக்கி நேற்று காலை 10;30 மணிக்கு, டாடா ஏஸ் வேன் ஒன்று காய்கறி ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. வேனில் டிரைவர் உட்பட இருவர் இருந்தனர்.பூத்துறை சாலையில் காளிக்கோவில் அருகே வளைவில் திரும்பியபோது, திடீரென நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் திடீர் பிரேக் பிடித்துள்ளார். அதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. அதில் படுகாயமடைந்த டிரைவர் உட்பட இருவரும் ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.விபத்து குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News