ஸ்ரீபெரும்புதூரில் கால்வாயில் விழுந்த பசு மாடு மீட்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் விழுந்த பசுமாடை தீயணைப்புத் துறையினர் மீட்பு
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் தனியார் மருத்துவமனை, உணவகம், வங்கி, பூக்கடை, ஜவுளிகடைகள் என, 300 க்கும் மேற்பட்ட சிறு, குறு வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள உணவகம் மற்றம் காய்கறி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் சாலையோரம் வீசுகின்றனர். இதனால், அதில் உணவு தேடி வரும் கால்நடைகள் சாலையின் குறுக்கும் நெடுக்கமாக ஓடுவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்நிலையில், சுங்குவார்சத்திம் நான்கு சாலை சந்திப்பில் இருந்து, மப்பேடு செல்லும் சாலையில், மொளச்சூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள கடைகளின் எதிரே, வீசப்பட்டிருந்த காய்கறி கழிவுகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த மசு மாடு, திடீரென மிரண்டு சாலையோரம் திறந்த நிலையில் இருந்த சிமென்ட் மழைநீர் கால்வாயில் விழுந்தது. அருகில் இருந்தவர்கள் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கால்வாயில் இருந்து மசு மாட்டை மீட்டனர்.