உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மானாமதுரை வட்டத்திற்கு உட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம்

Update: 2025-01-05 09:40 GMT
சிவகங்கை மாவட்டம், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் வருகின்ற 23.01.2025 அன்று மானாமதுரை வட்டத்தில் நடைபெறவுள்ளதையொட்டி, வருகின்ற 08.01.2025 முதல் 20.01.2025 வரை மானாமதுரை வட்டத்திற்கு உட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அரசாணை (நிலை) எண்:22 நாள்: 29.01.2024-ன் படி மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து மாவட்ட அலுவலர்களும் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு 2025 ஆம் ஆண்டிற்கு சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் வருகின்ற 23.01.2025 அன்று “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் நடைபெற உள்ளதால் துறை அலுவலர்கள் பொது மக்களிடம் வந்து மனுக்களைப் பெற்றுக் கொள்வார்கள். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை நேரில் கொடுக்க விரும்பினால் வருகின்ற 08.01.2025 முதல் 20.01.2025 வரையிலான அரசு அலுவலக நாட்களில் மானாமதுரை வட்டத்திற்குட்பபட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News