சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, பூலாவூரணி ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதையும், கிச்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் மானியத்தில் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், விளாம்பட்டி ஊராட்சியில் கிராமப்புற வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதையும், மாரனேரி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், மாரனேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பில் புதிய நியாய விலைக்கடை கட்டப்பட்டு வருவதையும், ஊராம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ரூ.15.67 இலட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டு வருவதையும், ஊராம்பட்டி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளதையும், துளுக்கப்பட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.1.20 மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும், பெரிய பொட்டல்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30.10 இலட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், பெரிய பொட்டல்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ரூ.4.25 இலட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புனரமைக்கப்பட்டுள்ளதையும், ஆனையூர் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.80 இலட்சம் மதிப்பில் கலையரங்கத்தில் பார்வையாளர்கள் அரங்கம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.