பூந்தியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

சிவகங்கை அருகே பூவந்தியில் திமுக இளைஞரணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2025-01-06 01:39 GMT
சிவகங்கை அருகே பூவந்தியில் திமுக இளைஞரணி சாா்பில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. பூவந்தி-சிவகங்கை சாலையில் பெரிய மாடு, சின்னமாடு என 2 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 51 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாடு பிரிவில் 17 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 17 ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாடுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுக்கு 6 கி.மீ. தொலைவும் பந்தய எல்லையாக நிா்ணயம் செய்யப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. பூவந்தி, திருமாஞ்சோலை, சுண்ணாம்பூா், பூஞ்சுத்தி, சிவகங்கை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று பந்தயத்தைக் கண்டுகளித்தனா்.

Similar News